தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

0 113
Stalin trichy visit

திருச்சி, டிச.13  திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிறுவனர் அரசகுமார் தலைமை தாங்கினார். மேலும் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் 2023- 2024 மற்றும் 2024 – 2025 கல்வியாண்டின் RTE நிலுவைத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் விடுவித்து அரசாணை வெளியிட்டமைக்கு நன்றி. மேலும் காலதாமதம் இன்றி பள்ளிகளின் வங்கிக் கணக்கில் RTE தொகையினை வரவு வைத்திட வேண்டுகோள் வைத்ததுள்ளோம். மேலும் தகுதி வாய்ந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு கட்டிட வரைபட அனுமதி போன்றவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவினை நடைமுறைப்படுத்தி காலதாமதம் இன்றி அரசாணைகள் வெளியிட வேண்டும். மேலும் 2024-2025 கல்வியாண்டில் சங்க வரவு சுமார் 97 லட்சம், 50 சதவீதம் அந்தந்த மாவட்ட சங்கங்களின் மாவட்ட செலவுக்காக பிரித்துக் கொடுத்துள்ளோம்.

குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஒரு சில நபர்களின் தவறான நடவடிக்கையால் POCSO வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதனை முறையாக விசாரணை நடத்தி அவசர கோணத்தில் வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கேள்வித்தாள்களுக்கான கட்டணம் செலுத்தி கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவினை மாற்ற வேண்டும். குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அரசின் பொதுத்தேர்வில் 100% வெற்றி பெருகிற மாணவர்களுக்கு அரசு பள்ளியில் விருது வழங்கும் விழா நடைபெறுவதைப் போலவே தனியார் பள்ளியில் 100% வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பெறுகின்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும். அதேபோல் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் சம அளவில் நல்லாசிரியர் விருது வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலான தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கு FC- யின் இப்போது 800 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், பேருந்து ஒன்றுக்கு 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கு கட்டுக்கடங்காத வகையில் வரி வசூலிக்கப்படுகிறது இதனை சட்டரீதியான எதிர்கொள்வோம் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகள் இந்த மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.