தமிழ்நாடு யோக ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

0 269
Stalin trichy visit

நம்பர் 1 டோல்கேட்டில் தமிழ்நாடு யோக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில,மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு யோக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில மற்றும் மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில ஆலோசனை தலைவர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து யோகா ஆசிரியர்கள் மற்றும் யோகா ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் இரண்டரை லட்சம் யோகா ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் யோக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் மற்ற மாநிலங்களை போன்று விளையாட்டுத்துறை மற்றும் அறநிலையத்துறை காவல்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் தோன்றிய யோக கலையை வளர்க்கவும், மேம்படுத்தாமல் தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள், அரசு பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் இதனை வருகிற உலக யோகா தினத்தில் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அவ்வாறு யோகா ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 20ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாகவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.