வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

0 390
Stalin trichy visit

திருச்சி, ஜன. 27  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் ராமஜெயம் திடலில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை வைத்தார் . மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் காடுவெட்டி அகதீஸ்வரன் வரவேற்று பேசினார் .துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர்,முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவா சரவணன், முன்னாள் துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர் .சிறப்பு விருந்தினராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தலைமை கழக பேச்சாளர்கள் சாவல் பூண்டி சுந்தரேசன், நந்தனம் நம்பிராஜன் மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை போற்றி சிறப்புரையாற்றினர்கள். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மயில்வாகனன், கனகராஜ், பானுமதி கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி ,ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், ராமச்சந்திரன், கேகே ஆர் சேகரன் ,மாவட்ட அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், அம்மன் பாபு, கிருபா ,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் தர்மன்லவன்,முத்துதுரை, முகமது ரபிக், கலைச்செல்வன் மற்றும் திமுக மாவட்டம், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரெங்கநாதபுரம் பிரபாகரன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.