குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 1 டோல்கேட் அடுத்த பிச்சாண்டார்கோயிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த வாலிபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் 29 வயதான பாலாஜி. இவருடைய மனைவி 23 வயதான ஸ்ரீவித்யா. தற்போது இவர்கள் புச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள கீழ அக்ரஹாத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாலாஜி கூலி வேலை செய்து வருகிறார்.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பாலாஜி குழந்தை ஏக்கத்தில் இருந்துள்ளார். மேலும் கடந்த ஐந்து நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மனைவி மண்ணச்சநல்லூர் அருகே ஓமந்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த பாலாஜி மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மனைவி வந்து பார்த்தபோது உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்து கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.