துறையூர் அரசு மருத்துவமனையில் ரூ.5.15 மதிப்பீட்டில் தாய்சேய் நல வார்டு

0 311
Stalin trichy visit

திருச்சி, நவ. 25 நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்ஆகியோர் இன்று (25.11.2022) திருச்சிமாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, ரூபாய் 5.15 கோடி மதிப்பீட்டில் தாய்சேய் நலவார்டு பிரிவுக்காக கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியும், ரூபாய் 61.55 லட்சம் மதிப்பீட்டில் 6 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மரு.டி.எஸ்.செல்வ விநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.