திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 43-வது மாமன்ற உறுப்பினர் செந்திலின் கலகலப்பு பேச்சால் அதிர்ந்து போன அவை

0 763
Stalin trichy visit

வணக்கத்திற்குரிய மாநகர தந்தை அவர்களே!
தாங்கள் 65-வார்டுகளுக்கும் தானே மாநகராட்சி தந்தை!
அப்படியென்றால் 65-வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து கொடுப்பது தானே நியாயம்!  என்றுரைத்து தங்களுக்கும் இந்த அவைக்கும் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன், இன்றைய முதல்வர் மாண்புமிகு நம் தளபதி அவர்கள் அன்றைய மேயராக இருந்த போது நம்முடைய தானயத்தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அன்றைய முதல்வராக இருந்து மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது மேயர் என்பதை ஏன் நாம் மாநகரத் தந்தை என்று அழைக்கின்றோம் என்று சொன்னால் ஒரு தந்தை என்பவர் தான் பெற்றெடுத்த அனைத்து பிள்ளைகளுக்கும் தான் ஈட்டுகின்ற சொத்தை சமமாகத்தான் பிரித்து கொடுப்பார் அதுபோன்று தான் மாநகரத் தந்தையும் தான் பெறுகின்ற நிதியை பாகுபாடு பார்க்காமல் அனைத்து வார்டுகளுக்கும் சமமாக பிரித்து கொடுத்து மாநகராட்சி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்ற வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி அதேபோல் தலைவர் சொன்னது போல் நீங்களும் ஒரு தந்தை ஸ்தானத்தில் எல்லாருக்கும் சமமாக நிதியை பிரித்து தாருங்கள் என்று வலியுறுத்தினார்,அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் இவரது பேச்சைக் கேட்டு கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர்

Leave A Reply

Your email address will not be published.