உணவு விடுதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயம்

0 361
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக் மாயமானது. மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர்.

லால்குடி சிறுதையூர் அண்ணா நகரை சேர்ந்தவர் 35 வயதான பாலமுருகன். இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 30 ம் தேதி லால்குடி ரவுண்டானாவில் உள்ள உணவு விடுதி முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மார்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.