திருவாசி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவாசியில் உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம வளர்ச்சி மேம்பாட்டிற்காக குடியரசு தினம் மே தினம் சுதந்திர தினம் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற வழக்கம் அப்போது கிராம பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்பட்டவை வசதிகளை மேம்படுத்த தீர்மானம் ஏற்றி கட்டமைப்பு செய்திகளை நிறைவேற்றுவார்கள். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரையின்படி ஊராட்சிகள் தின சிறப்பு கிராம கூட்டம் இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருவாசி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின
சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்கு பற்றி கிராம செயலர் காமாட்சி வாசித்து உரை ஆற்றினார். மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குநர் திருமதி.சாந்தி கலந்து கொண்டு துறை சார்ந்த திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் நடப்பு ஆண்டில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்திவரும் அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அது சமயம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ஜெயராணி, வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் உடன் இருந்தார்.
இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்