சொக்கலிங்கபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கோரிக்கை

0 236
Stalin trichy visit

மணப்பாறை  சொக்கலிங்கபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கோரிக்கை

மணப்பாறை நகராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு  அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் ஜனசக்தி உசேன், கிளைச்செயலாளர் காளிமுத்து, ஏஐடியூசி அருணகிரி ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அம்மனுவில் மணப்பாறை நகராட்சி ஐந்தாவது வார்டில் உள்ள சொக்கலிங்கபுரம் காலனி குடியிருப்பு பகுதியின் அருகில் உள்ள மோர்குளத்தையும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் வழித்தடத்தை தூர்வாரவும், குடியிருப்பு பகுதிக்கு தெருவிளக்கு அமைத்துக் கொடுக்கவும் 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட காவிரி குடிநீர் பைப்பை புதுப்பித்து முறையான குடிநீர் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.