அருள்மிகு ஸ்ரீ கோழி பெரம்மாயி கோயில் கும்பாபிஷேக விழா

0 199
Stalin trichy visit

திருச்சி, செப்.15  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதுக்குடி ஊராட்சியில் உள்ள ஒசனமேடு கருப்பு கோவில் திடலில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கோழி பெரம்மாயி, ஸ்ரீ முத்து கருப்பு, ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ விநாயகர், ராகு, கேது,அய்யனார், கன்னிமார்கள், மலையாள கருப்பு. பெரியண்ண சுவாமி. சப்பாணி கருப்பு, சாம்பன், ஸ்ரீ மகா காளேஷ்வரர், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி கடந்த 12 ந்தேதி காலை விக்ணேஷ்வரா பூஜை,பூர்னாஹூதி நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிது. தொடர்ந்து அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து திருக்குடமுழுக்கு நீர் ஏர் கலப்பை,ஜல்லிக்கட்டு காளை, பசு மாடு,வண்டி மாடு, குதிரை போன்றவைகளுடன் ஏராளமான பக்தர்கள் மேளதாளங்கள் வானவேடிக்கைகள் முழங்க புனித நீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேற்றிரவு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோயிலை சுற்றி வந்து விமான கலசங்களுக்கு மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை குல மக்கள், புதுக்குடி கிராம பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் விமரிசையாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.