மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா – ராட்சத – திரி கொப்பறையில் ஏற்றப்பட்டது
திருச்சி, நவ.26 மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா – ராட்சததிரி கொப்பறையில் ஏற்றப்பட்டது.
தென் கைலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற டிசம்பர் 3ம்தேதி மாலை 5மணியளவில் அருள்மிகு மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு மாலை 6மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடிஉயர செப்புக்கொப்பரையில் 300-மீட்டர் அளவுள்ள பருத்தித் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட திரியில் 700-லிட்டர் இலுப்பை எண்ணை. நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
அதற்காக மலைக்கோட்டை தாயுமானசுவாமி சன்னதியில் மெகாசைஸ் திரி தயாரிக்கும்பணி கடந்த 22ம் தேதிதொடங்கி நடைபெற்றுவந்தது, ராட்சத திரி தயாரிக்கும்பணிமுடிந்து, ராட்சத திரியை திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்துசென்று, ராட்சத திரிக்கு தீபம்காட்டப்பட்டு அரோகரா என பக்திமுழக்கத்துடன் பக்தர்கள் அடியார்கள் ஒன்றிணைந்து பக்திசிரத்தையுடன் திரியை மேலேஏற்றினர்.
பின்னர் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 700 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளைகொண்டு ஊறவைத்து, பின்னர் 3ம் தேதியன்று மாலை 6மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை இத்திருக்கோயில் உதவி ஆணையர் அருட்செல்வன் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.