ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம்

0 218
Stalin trichy visit

திருச்சி, நவ.26  முசிறி அடுத்த காட்டுப்புத்தூரில் ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் திரளாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவிலில் கடந்த 60 ஆண்டுக்கு மேலாக தூக்கு தேர் இல்லாததால் அப்பகுதி ஊர் பொதுமக்கள் புதிய தூக்கு தேர் செய்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி நாளை 27-ம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காட்டுப்புத்தூர், கணபதிபாளையம், சீத்தப்பட்டி, காந்தி நகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு புனித நீராடினர்.

பின்னர் அங்கிருந்து மஞ்சள் மேடு, அக்ரஹாரம், மோகனூர் சாலை கடைவீதி வழியாக ஸ்ரீ பிடாரி மதுரகாளியம்மன் கோவிலுக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் திரளாக ஊர்வலமாக வந்தடைந்தனர். அப்போது மதுரகாளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் காட்டுப்புத்தூர், சீத்தப்பட்டி, கணபதிபாளையம், காந்திநகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.