டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி

0 412
Stalin trichy visit

திருச்சி, மே 20  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே. புதுக்கோட்டை அருகே உள்ள பொம்மகம்மாவூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் யுவன்யா (வயது 6) . இன்று இவர் தனது சித்தப்பாவுடன் சென்று டிராக்டரில் உழவு வேலையில் ஈடுபட்டிருந்த போது யுவன்யா டிராக்டரில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை வையம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.