திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனை : போலீஸ் வேனை மறித்து மக்கள் போராட்டம்
திருச்சி, மே 20 திருச்சி மாவட்டம், மணப்பாறைறை அடுத்த மரவனூர் இடையபட்டியில் திருவிழா தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் ஒரு தரப்பைச் சேர்ந்த முருகேசன் (55), மற்றொரு தரப்பைச் சேர்ந்த சரவணன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசார் முருகேசனை போலீஸ் நிலையத்தில் இருந்து கைது செய்து அழைத்துச் செல்ல முயன்ற போது அந்த தரப்பைச் சேர்ந்த மக்கள் எந்த தவறும் செய்யாத ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி போலீஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.