ஆளுநரின் செயல்பாடு அவரது பொறுப்புக்கு அழகல்ல: திருமாவளவன் எம்.பி. பேட்டி

0 409
Stalin trichy visit

திருச்சி, ஏப். 25 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும், துணை வேந்தர்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.. அதை ஆளுநர் திட்டமிட்டே உருவாக்கினார். இந்த சூழலில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆளுநர் கூட்டிய மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். இது போன்ற ஆளுநரின் செயல்பாடுகள் அவரின் பொறுப்புக்கு அழகல்ல.

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வைத்த கோரிக்கை அரசியலுக்காக அல்ல, அது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு.

வக்ஃபு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ஆம் தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.