ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி திருச்சி விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி

0 333
Stalin trichy visit

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் மறைவையொட்டி  திருச்சி விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 74

2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷேக் கலீஃபா  சிறந்த அரசியல்வாதி மற்றும் சிறந்த தலைவராக இருந்து வந்தார்.
இந்தியா – ஐக்கிய அரபு அமீரக உறவுகள் செழுமையடைந்தன.

இந்த நிலையில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,
ஒரு நாள் துக்கம் அனுசரித்து
திருச்சி விமான நிலையத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.