முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த முதியவர் மாயம்….
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த முதியவர் நடைபயிற்சிக்கு சென்றவர் மாயமானார்.
நம்பர் 1 டோல்கேட் குறிஞ்சி நகர் பகுதியில் அருணாச்சலேஸ்வரர் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் குறிஞ்சி கல்லூரி ஆனந்தா அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான அய்யாவு.இவர் கடந்த இரண்டு வருடமாக இந்த முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் நடைப்பயிற்சி செல்வதற்காக வெளியில் சென்றவர் பின்னர் முதியோர் இல்லத்திற்கு திரும்பவில்லை. திடீரென மாயமானார். இது குறித்து காப்பக நிர்வாகி கொள்ளிடம் காவல்நிலத்தில் புகார் கொடுத்தார். புகார் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மயமான முதியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.