சரக்கு வேனை திருடியவர் போலீஸில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மெக்கானிக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேனை மர்ம நபர் திருடிச் சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்து விரட்டிச் சென்ற கால்நடை சந்தை அருகே மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்த நபருக்கு தர்டி அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.