ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் நித்யானந்தம் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவர், தனது நண்பரை பார்ப்பதற்காக திருச்சிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதுபோல் தற்போது திருச்சிக்கு வந்த அவர், திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோட்டல் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்தநிலையில் அவருடைய நண்பர் செல்போனில் நித்யானந்தத்துக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவர், ஹோட்டலுக்கு வந்து, கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் கதவையும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் கழிவறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.