திருநங்கைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

0 199
Stalin trichy visit

திருச்சி, ஜூன்21 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் திருநங்கைகளுக்கு ஆதார் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கவேண்டும் என்பதற்காக இன்று இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இன்று திருச்சியில் திருநங்கைகளுக்கு சேவைகள் மட்டுமல்லாது அவர்களது கோரிக்கைகளான பட்டா , வீடு உள்ளிட்டவைகளை முழுவதுமாக ஆய்வு செய்து அவர்களது அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். இன்று 200 திருநங்கைகள் வந்துள்ளனர் அவர்களுக்கு தொடர்ந்து இது போன்ற முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றார். திருச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்டது, அனைத்து துறை அலுவலர்களுக்கும் கடுமையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.