முசிறி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

0 604
Stalin trichy visit

 

திருச்சி, அக்.10 திருச்சி மாவட்டம்,  முசிறி காமராஜ் காலனியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் மோகன் பிரபு (23) இவர் திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் பி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகள் சந்தியா (20) இருவரும் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று கோவிலில் சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் முசிறி காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும்  அழைத்து சமரசம் பேசியதில், இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.