வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்த மாணவர்கள்

0 254
Stalin trichy visit

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முகமூடி அணிந்து வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்த மாணவர்கள்

55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தென்னூர் நடுநிலைப்பள்ளி, கிங் பவுண்டேஷன், திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முகமூடி அணிந்து வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிங் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன், அறங்காவலர் செபாஸ்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார்.
சிறைச்சாலையிலே செக்கிழுத்து கல்லுடைத்து இந்திய திருநாட்டின் உடைய விடுதலைக்காக போராடிய மாவீரன் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் என பள்ளி மாணவர்கள் நினைவு கூர்ந்தார்கள். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.