வெங்கடாஜலபதி  கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

0 322
Stalin trichy visit

துறையூரில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி  கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதனையொட்டி உற்சவ பெருமாள் உபயநாச்சியார்களுடன் சமேதராக  பெருமாள்மலை தலத்திலிருந்து புறப்பட்டு அடிவாரத்திலுள்ள அனுமன் கோவிலுக்கு 4.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கிருந்து காலை 7 மணிக்கு வெல்வெட் பல்லக்கில் புறப்பட்டு துறையூர் பெரம்பலூர் சாலை, கடைவீதி வழியாக துறையூரில் உள்ள வேணுகோபால் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து பெருமாள்-தாயாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், திருமஞ்சனமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.