திருவெறும்பூர்- திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர்கள் வணிகர் சங்க நிர்வாகியுடன் சந்திப்பு : ஆதரவு கோரினர்

0 73
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  திருச்சி திருவெறும்பூர் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர்கள் வணிகர் சங்க நிர்வாகியுடன் சந்திப்பு – ஆதரவு கோரினர்

திருச்சி (தெற்கு) மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ்  இன்று தில்லை நகரில் .
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் வி. கோவிந்தராஜூலு அவர்களைச் சந்தித்த வேட்பாளர்கள், நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சந்திப்பின் போது வணிகர்களின் கோரிக்கைகள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின் போது உடன் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகி ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.