காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் திருவிளக்கு பூஜை
திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று 508 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை 9வது ஆண்டாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, ராஜ கணபதி, ஆறுமுகப்பெருமான், மகாலட்சுமி, சரஸ்வதி, பஞ்சமுக பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 508 பெண்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜையை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையேற்று துவக்கி வைத்தார். பூஜையின் போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும், கடன் பிரச்சனை அகலவும், அனைவரும் நோயற்று நலமுடன் வாழவும், உலக மக்கள் ஒற்றுமையுடன் நலமுடன் வாழவும், இஸ்ரேல் போர் முடிவுக்கு வரவும், பிரார்த்தனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் விநாயகர் துதி, அம்மன் போற்றி கூறி விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் திமுக முன்னனி
நிர்வாகிகள்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை தமிழன்னை நற்பணி மன்றத்தின் தலைவர் அருள்குமார் தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.