தைப்பூசத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

0 146
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத பௌர்ணமி தினம் – தைப்பூசத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது – இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்,

மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு அம்மனுக்கு மொட்டை அடித்தும், தீ சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

தை மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவரும் நிலையில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது,

மேலும் மாதம் தோறும் அம்மன் கோவில்களில் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தை மாத பௌர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதி காலை முதலே நடை திறக்கப்பட்டது, 

இதனை அடுத்து உற்சவர் மற்றும் மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுமங்கலி பெண்கள் கலந்து கொள்ளும் 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் மாரியம்மன் முன்பு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்,

தை மாத பௌர்ணமி தினத்தில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு திருவிளக்கு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்,

விளக்கு பூஜை கோவில் அறங்காவலர் இளங்கோவன் மற்றும் கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள்கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.