அதிமுக ஒன்றிணைவதை விரும்பாதவர்கள் கட்சியை விட்டு அப்புறப்படுத்தப்படுவார்கள் : வைத்திலிங்கம் ஆவேசம்

0 283
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13  அ.தி.மு.க ஒன்றிணைவதை விரும்பாதவர்கள் கட்சியை விட்டே அப்புறப் படுத்தப்படுவார்கள் – மணப்பாறையில் வைத்திலிங்கம் ஆவேச பதில்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று மாலை அதிமுக ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொண்டர்கள்‌ உரிமை மீட்புக்குழு) திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜ்மோகன் மகளின் நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஆறு முன்னாள் அமைச்சர்கள்
அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பதாக வந்த தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்ச்சனம் செய்துள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு , அந்த ஆறு முன்னாள் அமைச்சர்களிடம் கேட்டால் தான் தெரியும் என்றார். அதேபோல் அதிமுக ஒன்றிணைவதை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர். அதனை விரும்பாதவர்கள் கட்சியை விட்டு அப்புறப்படுத்தப் படுவார்கள் என ஆவேசமாக பதில் கூறினார். விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மற்றும் அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.