திருச்சியில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்றவர்கள் கைது

0 249
Stalin trichy visit

திருச்சி ஏப் 7  திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கேகே நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு  கே சாத்தனூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஐயப்பன் 37 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 150 மதிப்புள்ள 465 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவருடன் இருந்த முகமது மைதீன் என்பவரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், திருச்சி உறையூர் போலீசார் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ராமலிங்க நகர் குழுமாயி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோகர் 43 ஆட்டோவில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். அவரிடமிருந்து 5 கிலோ புகையிலைப் பொருட்கள், கடத்தி வர பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ரூபாய் 13 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்  அவரிடம் நடத்தி விசாரணையில் சோமரசம் பேட்டை அருகே புகையிலை விற்ற பக்ருதீன் என்பவரிடமிருந்து 1.25 லட்சம் மதிப்புள்ள 114 கிராம் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல்  திருச்சி ராம்சி நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீஸ் அரங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற திருச்சி ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த கங்காதேவி (57) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.