கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் விநியோகம்
மணப்பாறையில் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
வீடு வீடாகச் சென்று ரேசன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

திருச்சி, ஜூலை 20 தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ம் தேதி முதல் தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதோடு அதற்கான விண்ணப்பங்களை ரேசன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா பகுதியில் இன்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மொத்தமுள்ள 119 கடைகளுக்கு உட்பட்ட 73149 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.