முதலிடம் பிடித்த செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி
தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. 10 கல்லூரிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி,
தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் அருட்தந்தை எஸ்.பீட்டர், முதல்வர் அருட்தந்தை எம்.ஆரோக்கியசாமி சேவியர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம்.பெர்க்மென்ஸ், உடற்கல்வி இயக்குனர் ஏ.பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குனர் எஸ்.ரெனில்டன் ஆகியோர் பாராட்டினார்.