மண்வள இயக்கம் குறித்து இன்று விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையத்தில் பயிற்சி நடைபெற்றது

0 309
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மண் வள இயக்கம் குறித்து இன்று விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை அலுவலர் உமா மகேஸ்வரி சிறப்பு உரை ஆற்றினார். மேலும் நடப்பாண்டில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றியும் விளக்க உரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில் மண் பரிசோதனையின் அவசியம், மண் மாதிரிகள் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முறைகள், மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகள் மண் மாதிரிகள் முடிவின்படி உரம் இடுதல், அங்கக உரம் இடுதலின் அவசியம் பற்றியும் குமுளூர் வேளாண்மை கல்லூரி மண்ணியல் துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் எடுத்துரைத்தார்.

வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் நன்றி உரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன், பயிர் அறுவடை சோதனை அலுவலர் பழனியப்பன் மற்றும் நாளாந்த வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவியர்கள் நிகழ்ச்சியில் செயல்விளக்கம் செய்து காட்டி கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.