நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க பயிற்சி

0 285
Stalin trichy visit

திருச்சி, ஜன.11 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளியில் நெல் பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க  பயிற்சி  நேற்று நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தை விவசாயிகள் மத்தியில் பரவச் செய்ய தமிழ் நாடு நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளி நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார்.  வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.  குமுளூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் சிவரஞ்சனி நெல் பயிரில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும், பயிர் பாதுகாப்பு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.