திருச்சியில் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0 51
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 திருச்சியில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள் ளன. இதில் பணியாற்றிவரும் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள னர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் பிறப்பித்து உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-
மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ் கண்ணன் திருச்சி வரவேற்பு தாசில்தாராக பணியிட மாற்றம் செய் யப்பட்டு உள்ளார். முசிறி தாசில்தார் எம்.லோகநாதன் முசிறி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகவும், துறையூர் தாசில்தார் எம். சிவக்குமார் திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஆகவும், திருச்சி கிழக்கு தாசில்தார் கே. விக் னேஷ் னேஷ் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில் தாராகவும், திருச்சி வரவேற்பு தாசில்தார் கே.சேக் முஜிப் திருச்சி கிழக்கு தாசில்தாராக வும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பொருள் வழங்கல் தனி தாசில்தார் பி.சித்ரா, துறையூர் தாசில்தாராகவும், முசிறி தனி தாசில்தார் ஏ.வீரப்பன், மண்ணச்சநல்லூர் தாசில்தாராகவும், திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தார் டி.மரகதவள்ளி மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் எஸ்.அகிலா திருச்சிமேற்கு உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் வருவாய் ஆய்வாளர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி தொட்டியம் தனி தாசில்தார் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் சித்ரா லால்குடி தாலுகா வாளாடி பகுதிக்கும், திருச்சி நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப் புற நிலவரி திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவப்பிரகாசம் லால்குடி தாலுகா பெருவளப்பூர் பகுதிக்கும், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா நிலம் எடுத்தல் தனி தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் வருவாய் ஆய்வாளர் அருள்தாஸ் மருங்காபுரி தாலுகா வளநாடு பகுதிக்கும், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோட்டைராஜா லால்குடி தாலுகா புள்ளம்பாடி பகுதிக்கும். திருச்சி மேற்கு தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராணி மண்ணச்சநல்லூர் திக்கும், திருச்சி கொட்டப் தாலுகா கரியமாணிக்கம் பகு பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் முது நிலை வரு வாய் ஆய்வா ளர் விமலா துறையூர் தாலுகா எர குடி பகுதிக் கும் மாற்றம் செய்யப் பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்டவருவாய் அதிகாரி பாலாஜி பிறப்பித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.