கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சி, ஜூலை 23 கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே கோட்டப்பாளையம் கிறிஸ்தவ ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பி.மேட்டூரை சேர்ந்த சின்னம்மா (வயது 65) என்பவர் வேடிக்கை பார்க்க சென்றார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை யாரோ பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வருகின்றனர்