காவல் துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

0 455
Stalin trichy visit

திருச்சி,மே 7  திருச்சி மாநகரக் காவல்துறையில் துணை ஆணை யர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் கள் சிலர் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.

திருச்சி தில்லைநகர் காவல் உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த தங்கப்பாண்டியன் விழுப் புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பியா கவும்,, அரியலுார் மாவட்ட சமூக. நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ் பியாக பணியாற்றிய கென்னடி, திருச்சி கேகே நகர் உதவி ஆணை யராகவும் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இதற்கான உத் தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.

மேலும் திருச்சி உறையூர் போலீஸ் குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் ரவிச்சந்திரன், அரசு மருத் துவமனை காவல் நிலைய ஆய்வா ளர் செந்தில்குமார், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளர் பேபி உமா ஆகியோர் மத்திய மண்டலத்துக்கும், திருவாரூர் மாவட் டம் எடையூர் காவல் நிலைய ஆய் வாளர் இம்மானுவேல், தஞ்சா வூர் மாவட்டம் பூதலுார் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரம ணியன் ஆகியோர் திருச்சி மாந கர காவல் துறைக்கும், திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் கார்த்திகா திருச்சி சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல (ஐஜி) காவல் துறைத் தலைவர் ஜோஷிநிர்மல் குமார் பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.