திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
திருச்சி, ஜூலை 24 திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் குறிப்பாக சாலை வசதி சாக்கடை வசதி சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு மாடுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி (அதிமுக) பேசுகையில் எந்தப் பணிகளும் மாநகராட்சியில் சரிவர நடைபெறவில்லை சாக்கடைகள் சரியான முறையில் தூர்வாரப்படவில்லை குற்றம் சாட்டினார். அப்போது குறிக்கிட்டு பேசிய மேயர் உங்கள் ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்த போதிலும் நீங்கள் என்ன பணி செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் நாராயணன்,செல்வ பாலாஜி, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் துர்கா தேவி,ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்