சமயபுரம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிய வாலிபர் கைது
திருச்சி, ஜூலை 23 சமயபுரம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிய வாலிபர் கைது
சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் பகுதியில் அய்யா ளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மர்மநபர் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலி மற்றும் கோவிலின் உள்பகுதியில் இருந்த சரவி ளக்கு ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் சர விளக்குகளை திருடியது புறத்தாக்குடியை சேர்ந்த ஸ்டீபன் சின்னமுத்து மகன் அருளானந்தம் (வயது 26) என்பது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.