மாநில அளவில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் திருச்சிக்கு 2ம் இடம்

0 306
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து மாவட்ட நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆகும். அவர்களில் கடந்த சனிக்கிழமை வரை 12 லட்சத்து 16 ஆயிரத்து 494 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 53.3 சதவீதம் ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 12-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அதன்மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 780 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 132 சதவீதமாகும். அதாவது இலக்கை தாண்டி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3-வதுகட்டமாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 353 இடங்களிலும், மாநகராட்சி பகுதியான நகர்ப்புற பகுதிகளில் 162 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தபட்டது.

மாலை 7 மணிவரை நடந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 97,199 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அளவில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில், திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.