தே.மு.தி.க. நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. மாவட்ட பொருப்பாளராக செயல்பட்டு வந்தவர்கள் மாவட்ட செயலாளர்களாக இன்று (நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக ஆர்.பாரதிதாசன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.மன்மதன் ஆகியோர் உள்பட கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பணி சிறப்பாக நடைபெற அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து தே.மு.தி.க. தங்கள் மாவட்டத்தில் மாபெரும் வளர்ச்சி அடைய அனைவரும் சிறப்பாக பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.