திருச்சி அருகே டூவீலரில் மணல் கடத்திய 2 பேர் கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஒட்டகுடி காவிரிகரையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் திருவெறும்பூர் தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்திச் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கீழமுல்லைக்குடி வளன்நகரை சேர்ந்த திருப்பதி(29), புத்தவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னராசு என்கிற வேல்முருகன்(23) என்பது தெரியவந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திருப்பதியின் சகோதரர் விக்னேஷை தேடி வருகின்றனர்.