காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கண்டித்து திருச்சியில் ABVP அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்மீதும் திடீர் தாக்குதரல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் இதனை கண்டித்து இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை மேலசிந்தாமணி பகுதியில் தேசிய மாணவர் அமைப்பான திருச்சி ABVP சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இறுதியில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ABVP – யின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.அஸ்வின் தலைமையில் தென்தமிழக மாநில இணை சமூக ஊடக பொறுப்பாளர் ஸ்ரீ. பிரவிண் , திருச்சி மாநகர இணை செயலாளர் ஸ்ரீ. சந்தோஷ் குமார் கலந்து கொண்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo