காட்டுப்பன்றி கடித்து விவசாயி உள்பட இருவருக்கு காயம்

0 185
Stalin trichy visit

திருச்சி, ஆக 12 கல்லணை அருகே காட்டுப்பன்றி கடித்து விவசாயி உள்பட இருவர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், கல்லணை நடுக்கரை, கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை, பொண்ணுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாளாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை நம்பி அப்பகுதி மக்களும் வாழ்வை நடத்தி வருகின்றனர். நடுக்கரை பகுதி காவிரி – கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே செல்வதால் அப்பகுதியில் தஞ்சமடைந்த காற்று பன்றிகள் கல்லணை நடுக்கரை பகுதியில் பயிர் செய்யப்படும் நடவு, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பெரிய அளவில் சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுபன்றி அங்கு இருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரை கடித்து குதறியதோடு தொடையின் பின்பக்கம் பன்றியின் கொம்பு குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதேபோல் நேற்று மாலை உத்தமர்சீலியை சேர்ந்த கணபதி (70) இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிர்வாகி இவர் நேற்று தனது வாழைத்தோட்டத்திற்கு சென்ற பொழுது அங்கு வந்த காட்டு பன்றி கணபதியை பல இடங்களில் கண்டித்துள்ளது. இதில் கணபதி பலத்த காயமடைந்தார். அவர் சத்தம் கேட்டு அங்கு சென்றவர்கள் கணபதியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் வனத்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பன்றி தாக்கிய பகுதியையும் பார்த்துள்ளனர். மேலும் காட்டு பன்றியை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாய தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு பன்றியை விரட்டிய உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை காட்டுப்பன்றி கடித்துக் குதறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Leave A Reply

Your email address will not be published.