துறையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

0 267
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுக மேற்கு ஒன்றிய சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பேபி லெனின் வரவேற்புரை ஆற்றினார்
கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் கஸ்டமர்ஸ் மகாலிங்கம் சரண்யா மோகன் தாஸ் ஏ. கே.பழனிவேல் தர்மன் விஜய் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மற்றும் பி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன்மற்றும்  தலைமை கழக பேச்சாளர் ஆலங்குடி செல்வராஜ் கலந்து கொண்டனர். ஆலங்குடி செல்வராஜ் பேசுகின்ற பொழுது இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருக்கும் பொழுது அவசரஸ் கால சட்டமான கருப்பு சட்டத்தை அவர் கொண்டு வந்த போது அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட பல தேசத் தலைவர்களை சிறையில் அடைத்தார் என்றும் அதற்கு தமிழகத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குரல் கொடுத்தார் என்று கூறினார். இதெல்லாம் இன்றைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சராக இருக்கும் வேல்முருகனுக்கும் தெரியவாய்பில்லை
என கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் எம் கே சுபாஷ் சதீஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் இளைஞர் அணி நிர்வாகிகள் சசிகுமார் ராஜா அருண் கண்ணன் விமல் ராஜ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் நன்றியுரை மாவட்ட பிரதி குமார் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.