அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி – ஜேசிபி வாகனங்கள் பறிமுதல்
திருச்சி, ஆக. 30 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆலம்பட்டி புதூர் மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு உதவிஆய்வாளர் சதீஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் .அப்போது அங்கு அனுமதி இன்றி மணல் அள்ளியது தெரியவந்தது.
அதனை அடுத்து அப்பகுதியை ஆய்வு செய்த போது காவலர்களை கண்டவுடன் வாகனங்களை விட்டுவிட்டு லாரி ஓட்டுனர் மற்றும் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதனை அடுத்து மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர் .
மேலும் இச்சம்பவம் பற்றி மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.