என்.ஐ.டி. விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : மாவட்ட ஆட்சியர்
திருச்சி, ஆக. 30 பெண்கள் விடுதிக்குள் வேலை காரணமாக எலக்ட்ரீசியன் பிளம்பர் போன்றவர்கள் செல்லும் பொழுது வார்டன் துணையோடு செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி
பாலியல் ரீதியான புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது இந்த முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து பழுது நீக்குவது குறித்தும் இயந்திரங்கள் கையாள்வது குறித்தும் பார்வையிட்டு கேட்டறிந்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: என் ஐ டி-யில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்கனவே அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து கைது செய்துள்ளோம் விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராடினர் இதுகுறித்து ஏற்கனவே என் ஐ டி நிர்வாகம் சார்பாக விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதுவரை மாவட்ட நிர்வாகத்திற்கு பாலியல் ரீதியான புகார்கள் ஏதும் வரவில்லை
பாலியல் ரீதியான புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பார்வையிட்டு உள்ளனர் சிசிடிவி எதும் பிரச்சனை இருந்தால் அதனை மேம்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்துவோம்
பெண்கள் விடுதியில் ஆண்கள் அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் வேலை காரணமாக எலக்ட்ரீசியன் பிளம்பர் போன்றவர்கள் செல்லும் பொழுது வார்டன் துணையோடு செல்ல வேண்டும் பெண்கள் விடுதியில் ஆண்கள் நுழைய கூடாது பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை சரி செய்வதாக நிர்வாகம் கூறியுள்ளது