திருச்சியில் மத்திய மண்டல அலுவலகம், 3 போலீஸ் நிலையங்கள் விரைவில் தொடக்கம்

0 9
Stalin trichy visit

திருச்சி, செப்.4-திருச்சியில் போதைப்பொருள் தடுப்பு படை பிரிவுக்கு மத்திய மண்டல அலுவலகம், 3 போலீஸ் நிலையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் அதன் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், முதல்-அமைச்சர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் வகையில் போதைப்பொருள் தடுப்பு படை (ஏ.என்.டி.எப்.) அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது. போதைப்பொருள் தடுப்பு படையை அமைத்து செயல்படுத்துவதற்காக, தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்காக மொத்தம் ரூ.264 கோடியே 14 லட்சத்து 28 ஆயிரத்து 116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இததொடர்பாக உள்துறை (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) அமைச்சகம் கடந்த மாதம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு படையின் மாநில தலைமைநாயகம் சென்னையில் செயல்படும். இதற்கு கூடுதல் டி.ஜி.பி. தலைமை வகிப்பார். அவருக்கு உதவியாக ஒரு ஐ.ஜி. மற்றும் 2 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றுவார்கள். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் வகையில் இந்த படை செயல்பட உள்ளது.

திருச்சியில் மண்டல அலுவலகம் மாநிலம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 28 காவல் மாவட்டங்கள் என்று மொத்தம் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு படை போலீஸ் நிலையங்கள் மற்றும் இவற்றை கண்காணிக்க 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சைபர் ஆய்வகம், குற்ற ஆவண பணியகம், கள புலனாய்வு பிரிவு, சிறப்பு நடவடிக்கை மற்றும் விசாரணை பிரிவு, நிதியியல் புலனாய்வு பிரிவு, சட்ட பிரிவு, பயிற்சி பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, நிர்வாக பிரிவு, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட சென்னை மாநில தலைமையகத்தின் கீழ் நவீன தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு வசதிகளுடன் 10 சிறப்பு பிரிவுகள் செயல்பட உள்ளன.

அவற்றில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டுதிருச்சிமத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 காவல் மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் எல்லையை உள்ளாக்கிய பகுதிகளில் அமைக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு படையை கண்காணிக்க ஒரு மண்டல அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி காவல் மாவட்டத்தில் ஒன்றும், திருச்சி மாநகர காவல்துறையில் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுக்கு தலா ஒன்றும் மொத்தம் 3 போதைப்பொருள் தடுப்பு படை போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு போதைப்பொருள் தடுப்பு படை போலீஸ் நிலையத்துக்கு தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், தலா 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், தலா 20 போலீசார் வீதம் 75 பேர் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

மேலும் போதைப்பொருள் தடுப்பு படை போலீஸ் நிலையத்துக்கு தலா ஒரு ஜீப், தலா 4 மோட்டார் சைக்கில்களும், போதைப்பொருள் கண்டறியும் கருவி தலா 5, பிரிிகசர், கெட்ச்மென் கண்டறியும் கருவி தலா 3, உடலில் அணியும் கேமரா தலா 2, வாக்கிகால்கிதலா 3 மற்றும் போலீஸ் நிலையத்தில் பொருத்த தலா 4 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கவும், போலீஸ் நிலையத்துக்கான மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கவும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 86 ஆயிரத்து 500 ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்புபடை போலீஸ் நிலையத்துக்கு சுப்பிரமணியபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் வடக்கு, தெற்கு என் 2 போதைப்பொருள் தடுப்பு படை போலீஸ் நிலையங்களுக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொடங்கப்பட உள்ள இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.