வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தை தின பேரணி

0 261
Stalin trichy visit

 

திருச்சி, ஜன.24 திருச்சி மாவட்டம் முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தை தின பேரணி இணைப்பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் குணா அவர்களின் வழிகாட்டுதல் படி, நிறுவனர் மற்றும் தாளாளர் நாளந்தா வேளாண் கல்வி நிறுவனம் அல்லி இங்கர்சால் தலைமையில் நடைபெற்றது. மாணவி பனிமலர் அனைவரையும் வரவேற்றார். முனைவர். C. சேகர் முன்னிலை வகித்தார். முசிறி அரசு மகளிர் பள்ளியின் தலைமை அசிரியை திருமதி. தீபா, பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவை தலைவர் முனைவர். மகாலட்சுமி குணசேகரன், நகராட்சி தலைவர் கலைச்செல்வி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இப்பேரணி முசிறி முக்கிய நகரப் பகுதிகளான கைகாட்டி, துறையூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது முடிவில் கயல்விழி  நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.