வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச. 20 திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், நகர பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.