விஜய் தன்னுடைய கொள்கையை தெளிவுப்படுத்த வேண்டும் : சீமான் பேட்டி

0 198
Stalin trichy visit

திருச்சி, ஆக.28  விஜய் தங்களின் கொள்கை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும். பாஜக கொள்கை எதிரி,  திமுக அரசியல் எதிரி மட்டும் கூறுவது கொள்கையாகாது – திருச்சியில் சீமான் பேட்டி

உலக தமிழ் கிறிஸ்த்தவர் இயக்கம் சார்பில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கிறிஸ்தவர்களுடன் கலந்துரையாடினார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,

அவரவருக்கு அவரவர் இயக்கம் பெரிது. ஆர்.எஸ்.எஸிலிருந்து வந்தவர்கள் அதை சார்ந்தவர்கள் அந்த இயக்கத்தை பெரிதாக பேசுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு என்ன விடுதலையை விரும்பியதா ? விடுதலைக்காக போராட்டம் நடத்தியதா ?

பாஜக உங்கள் கொள்கையை எதிரி என விஜய் கூறுகிறார் அப்படி என்றால் காங்கிரஸ் குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன ?

காங்கிரஸ்க்கும் பா ஜ.க விற்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது.

கட்சி கொடிகளின் வண்ணம் மாறுமே தவிர அவர்களின் எண்ணம் மாறாது.

அதிகாரம் என்பது ஆபத்தானது. பா.ஜ.க வின் அதிகாரம் மிகவும் ஆபத்தானது

பாஜக என் கொள்கை எதிரி, திமுக என் அரசியல் எதிரி என விஜய் பேசுகிறார். அரசியலுக்கும் கொள்கைக்கும் என்ன வேறுபாடு உள்ளது.விஜய் அவரின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். திமுக என் அரசியல் எதிரி பாஜக என் கொள்கை எதிரி என கூறுவது மட்டுமே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது.

பாஜகவை நாங்கள் கொள்கை எதிரி என்கிறோம். அவர்கள் எங்களின் கொள்கை எதிரி என்பதற்கான நூறு உதாரணங்கள் எங்களால் கூற முடியும்.

இது நமக்கான அரசியல் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறேன். வாக்கிற்காக செய்ய வேண்டுமென்றால் நான் பத்தாண்டுகளாகவே செய்திருக்க வேண்டும்.

இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சிறுபான்மை என கூறக்கூடாது மதத்தின் அடிப்படையில் எண்ணிக்கையை உலகில் எந்த நாடும் கணக்கிடுவது கிடையாது. உலகெங்கும் மானுடர்களை மொழி வழியாகத்தான் கணக்கிடுகிறார்கள்.

மதம் மாறிக்கொள்ள முடியும் ஆனால் மொழி இனம் மாற முடியாதது .

கூட்டணி ஆட்சி முறை என்பது சரிதான். இந்தியாவை கூட்டணி ஆட்சி தான் பல முறை நடந்துள்ளது. ஆனால் அதனால் என்ன நன்மை கிடைத்தது ?

தலைமை தவறாக இருக்கும் போது எவ்வளவு படை உடன் இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், தனி ஆட்சியாக இருந்தாலும் தலைமைக்கு சரியான நோக்கம் இருக்க வேண்டும்.

விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரின் விருப்பம், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது அவரின் விருப்பம்.
எதை அரசியலாக்க கூடாதோ அதை தான் அரசியலாக்குகிறார்கள். இது ஒரு நோய் தான்

வாக்கு திருட்டு உள்ளிட்டவற்றை சரி செய்ய மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் வாக்குச் சீட்டு முறையால் 90 விழுக்காடு நேர்மையாக நடைபெற வாய்ப்புள்ளது. அதுவும் முழுமையாக நடக்க வாய்ப்பில்லை.
மொத்தமாக தேர்தல் நடைபெறுவதில் மாற்றம் வர வேண்டும்.

முதலமைச்சர் பீகாருக்கு சென்று வாக்கு திருட்டுக்கு எதிராக பேரணி செல்வது தேர்தல் அரசியல் தான்.

பெரியார் பிறக்காத பீகாரில் ஜாதிவாரி கணல்கெடுப்பு நடத்துகிறார்கள் ஆனால் பெரியார் பெயரை கூறி சமூக நீதி என பேசுபவர்கள் கணக்கெடுப்பு நடத்தாதது ஏன் ?

வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும், ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ?

பெரியாரின் சிந்தனைகளிலிலிருந்து நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிந்தனை எதுவுமில்லை, அடிப்படையில் நாங்கள் பகையாகி விட்டோம்.

தமிழ் மொழியை ஒழிக்க வேண்டும் என கூறியவரை நான் எப்படி ஏற்று கொள்ள முடியும்.

பெரியார் சமூக நீதி, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு என அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டார். ஆனால் தமிழ் மொழியை அழிப்பதில்  வெற்றி அடைந்துள்ளார்.

உலக நாடுகளை ஒப்பிடும் அளவிற்கு தமிழ்நாடு உயர்ந்ததற்கு பெரியாரின் கொள்கைகள் தானே காரணம் செய்தியாளர்கள் கேட்டதற்கு

கொலை கொள்ளை கற்பழிப்பு மீட்டவற்றில் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. உலகில் அதிக கடன் பெற்ற நாடு இந்தியா இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு இதில் தான் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது.

காலை உணவு கூட உண்ண முடியாத நிலைக்கு மக்களை 50 ஆண்டு காலமாக வைத்துள்ளார்கள். போக்குவரத்து கல்வி மருத்துவம் உள்ளிட்ட எதுவும் ஒழுங்காக இல்லை.

Leave A Reply

Your email address will not be published.