உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது…

மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்கான உள்ளாட்சி தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதனையடுத்து
திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டசத்து மைய அலுவலக அறையில் வைக்கப்பட்டு சரி பார்க்கும் பணி நடைபெற்றது.
தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்க்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளதால் விரைவாக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.